Wednesday, 12 April 2017

சென்னை: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலத்தை சங்கிலியால் பூட்டு போட்டு இளைஞர் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வறட்சி நிவாரணம், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 31-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்திய அரசு செவி சாய்க்காததை கண்டித்து, சென்னையின் கிண்டி கத்திபாரா மேம்பாலத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் மாணவர், இளைஞர் அமைப்பினர் ஈடுபட்டனர்.



பரபரப்பான கிண்டி பாலம் சென்னையின் முக்கிய பாலமான கிண்டி கத்திபாரா பாலத்தை முடக்கியதால் காலை நேரத்தீல் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனினும் விவசாயிகளுக்கான போராட்டம் என்பதால் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு அளித்தனர்.

30 நிமிடங்கள் சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த போராட்டத்தை முடித்து கொள்ளுமாறு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் கேட்காததால் போலீஸார் வலுக்கட்டாயமாக சங்கிலியை உடைத்து எறிந்தனர். இதனால் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதூ. சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் வாகன நெரிசல் நீடித்து வருகிறது

No comments:

Post a Comment