Thursday, 13 April 2017

இப்படியும் ஒரு பெண் ஆசிரியர் ...!

#எடுத்துக்காட்டானவர் 
நம்புங்கள், நீங்கள் பார்ப்பது அரசு பள்ளிதான். அப்பள்ளியில்...இப்படியும் ஒரு பெண் ஆசிரியர் Annapurna Mohan! 
தன் நகையை அடகு வைத்து அரசு பள்ளியை மெருகூட்ட ரூ 1,60000 ரூபாய் செலவழித்தும் அரசின் எந்த ஒரு உதவியையும் எதிர்பார்க்காமல் தன் வகுப்பறையை ஆங்கில வழிப் பள்ளிக்கும் மேலாக மெருகேற்றிய, விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த மரக்காணம் ஒன்றியம் கந்தாடு அரசு தொடக்கப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியருக்கு ஒரு ராயல் சல்யூட்..
அழகான வகுப்பறை..... தொடுதிரை ஸ்மார்ட் கிளாஸ்...அதோடு மட்டுமல்லாமல் சேர் எழுத்து மேஜை....
அழகாக ஆங்கிலத்தில் பேசும் 3ம் வகுப்பு மாணவர்கள்.எந்த ஒரு ஆங்கில நாளிதழையும் படிக்கும் திறன் ...
இதை விட வேற என்ன வேணும் ங்க.......
அரசு பள்ளியில் இந்த ஆசிரியர் எடுக்கும் வகுப்பு 3 ஆம் வகுப்பு.. மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது அமெரிக்கன் இங்கீலிஸ் தான்... அனைத்து 3 ஆம் வகுப்பு மாணவர்களும் Phonetics method யைப் பயன்படுத்தி மிக தெளிவாக அழகாக படிக்கிறார்கள்..இந்த 3 ஆம் வகுப்பு மாணவர்களிடம் ஆங்கில நாளிதழைக் கொடுத்தால் மிக அழகாக வாசிப்பார்கள்...தெளிவாக....
மொத்ததில் பள்ளியின் வகுப்பறையும் அழகு ..பள்ளி குழந்தைகளின் திறமையும் அழகோ அழகு...
இந்த ஆசிரியர் தயாரித்த
சி டி ஆங்கிலத்தில் தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிக்கும் விரைவில் அரசின் மூலமாக வெளிவரப் போகிறது...
joint director Latha அவர்கள் கவனத்திற்கு இவருடைய மெச்சத்தகுந்த பணி சென்றுள்ளது...
ஆங்கிலத்தில் புலமை பெற்ற பெண் ஆசிரியர்.....
மொத்தத்தில் 100 க்கு 100.....மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இவருக்கு மதிப்பு....
இவர் முகநூல் இணைந்து நாமும் நம் குழந்தைக்கு தேவையான கருத்துக்களை எடுத்துச் செல்வோம்...முகநூலில் நாமும் இந்த மாணவர்களின் திறமையை பார்வையிடுவோம்...... பார்வையிட்டால் நம் மனதை அம்மாணவர்களிடம் பறி கொடுத்துவிடுவது உறுதி.... விரைவில் இந்த ஆசிரியரின் புகழ் பரவும்.....
ரூ 10 ஊக்கப்பரிசு அனுப்பியதில் பழக்கம்.....இந்த ரூ 10 ஊக்கபரிசு.... இந்த அரசு பள்ளியையும் மாணவர்களின் திறமையையும் எங்கோ உயரத்திற்கு கொண்டு செல்வது உறுதி!

No comments:

Post a Comment