Thursday, 11 May 2017

Urinary infection க்கு தலைசிறந்த மருந்து #Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்...

இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று!
உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது.
"உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை!"
நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்...
என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்...
என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்...
கையமர்த்திய டாக்டர், "முதலில் பதினைந்து நாட்களுக்கு ஒரு மருந்து தருகிறேன் அதில் குணம்
தெரியாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்றார்.
அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது...
டாக்டர் மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கட்டியும் போய்விட்டது...
எனக்கு ஆச்சரியம்…
"உங்களுக்கு குணமாகி விட்டது" என்றார்.
அவர் கொடுத்த மருந்து #Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்...
இந்த மருந்தை பற்றி 40 வருடங்களுக்கு முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன்
Urinary infection க்கு தலைசிறந்த மருந்து,
"ஏன் டாக்டர் இந்த மருந்தை யாரும் prescibe செய்வதில்லை?" என்று கேட்க...
அவரோ சிரித்துக் கொண்டே "பின்பு எப்படி லட்சங்களை கறப்பது?" என்றவர்
"நம் நாட்டின் மிகப் பெரிய எதிரிகள் மருந்துக் கம்பெனிகள் மருத்துவ மனைகள், இவர்களை சரி செய்தாலே பலர் ஏமாற்றப்படுவது குறையும்" என்றவர், பல மருத்துவமனைகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன என் உயிருக்கே கூட ஆபத்து வரலாம்!
I am agaist exploitation of innocent patients!" என்று முடிக்க அவரை ஒரு கேள்வி கேட்டேன்.
"ஏன் டாக்டர் நீங்கள் எப்போதுமே கறுப்பு கலரிலேயே உடை அணிகிறீர்கள்? உங்கள் காரில் சே'குவாரா ஸ்டிக்கர் இருக்கிறதே?"
என கேட்க...
"நான் கடவுள் நம்பிக்கை உடையவன் தான், ஆனால் Anti Establishment... சுரண்டலுக்கு எதிரனவன் அதனால் சே' குவாரா பிடிக்கும்" என்றார்.
25 வருடங்களாக இன்சுலினிலேயே வாழ்ந்து வந்த எனக்கு சக்கரை நோயை ஒரே வருடத்தில் ஒழித்து... என்னை டசன் கணக்கில் '#இமாம்_பசந்த்' மாம்பழங்களை சாப்பிடும் அளவிற்கு குணமாக்கிய டாக்டர் இவர் தான்... இவர் ஒரு ஆங்கில மருத்துவர் MS படித்தவர் அவருடைய அனுமதியுடன் அவருடைய தொடர்பு தகவல்களை வெளியிடுகிறேன்.
Dr. V.Madhavan MD (Int. Med) Consultant Diabetologist/Physician*l
For Appointments 044 65551839 24483314 (between 9 am and 1 pm)
At Chennai T Nagar, Thiruvanmiyur, Nanganalur. …
அவரைப்பார்க்க செல்லும் போது சமீபத்தில் நல்ல தரமான Labல் எடுக்கப்பட்ட FF , PP , HbA1c (3 மாத சராசரி சக்கரை அளவீடு) தகவல்களுடன் செல்லவும்!

Monday, 8 May 2017

TO SOLVE THE KITNY STONE @ 10 RS

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன்,
ஆனால் வலியின் அளவுகூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார்.
சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை,
உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன்.
இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன்,
இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்,
இன்னும் அதிகமாக குடிக்கமுடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன்,
வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும்,
அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும்.
கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்துரத்தமும் வரலாம்,
ஒரு நாளில் சரியாகிவிடும்.மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணைய தளத்தில் படித்ததில் சில :
துளசி இலை(basil) :
இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) :
அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ):
இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) :
இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ):
நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் :
இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் :
வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 :
கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
குறிப்பு 2 :
இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம்.
இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

Tuesday, 2 May 2017

*மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?*

*மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?*
*நாம் மது (இனி ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) அருந்தும்பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக் கொள்ளும். அதனால்தான் உணவு உண்டபின்னர் மது அருந்தினால் போதை ஏற சற்று நேரமாகின்றது.*
*சாராயத்தின் செறிவினைப் பொறுத்து அது எத்தனை வேகத்தில் நம் உடல் உறிஞ்சிக்கொள்கின்றது என்பது மாறுபடும். உதாரணமாக பீரை விட விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்றவைகள் அதிவேகமாக உறிஞ்சிக்கொள்ளப்படும்.*
*உறிஞ்சப்பட்ட சாராயம் உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து உடலெங்கும் ஓடத் துவங்கும். அதே சமயத்தில் நம் உடலும் அதனை வெளியேற்ற சற்று பிரயத்தனப்பட்டு வேலை செய்யத் துவங்கும். சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக்காற்றில் வெளியேற்றும். (அதனால்தான் Breath Analyserல் கண்டு பிடிக்கின்றார்கள்)*
*கல்லீரல் தன் பங்கிற்கு பெரும்பாலான அளவை ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக்கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால்... என்னாகும்?*
*அதனால்தான் அவைகள் விரைவில் தம் இயல்பில் குன்றி வலுவிழந்து செயலிழந்து போகின்றன. இதுவே ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரிதான்.*
*சரி, இனி ஆல்கஹாலின் செயல்பாடு மூளையினை எப்படிப் பாதிக்கின்றது. இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் நம் மூளைக்கும் ஒரு பயணம் போகும்.*
*அதன் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration. இரத்தத்தில் ஆல்கஹாலின் செறிவு.*
*BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், தான் ஒரு பெரிய பலசாலி, தன்னால் எதுவும் முடியும் என்று ஒரு எண்ணம் வரும். உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும். இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. ஏனெனில், மனதில் முதலில் எது படுகின்றதோ அதுவே சரியானதாகத் தெரியும். அந்தச் சூழ்நிலையில் யாராவது எதாவது சொன்னாலும், அதற்கேற்றவாறே மனம் செயல்படத் தோன்றும்.*
*BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில், தூக்கம் தூக்கமாக வரும். நினைவுகள் மழுங்கும். சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. வேகமாக இயங்க முடியாது. கையில் இருக்கும் மதுவைத் தடுமாறிக் கொட்டிவிட்டு அதனை வெறித்துப் பார்ப்பார்கள். உடல் ஒத்திசையாது. நிலை தடுமாறும். நடக்கையில் உடல் தள்ளாடும். கண் பார்வை மங்கும். கேட்கும் திறன், சுவை உணர்தல், தொடுதல் போன்ற உணர்வுகளில் தடுமாற்றம் அல்லது இல்லாமல் போய்விடும்.*
*BAC 0.18ல் இருந்து 0.30 சதவீதம் இருக்கையில், தான் என்ன செய்கின்றோம் என்று அவருக்கே தெரியாது. குழப்பமாக இருக்கும். ஒன்று அதீத பாசக்காரராக மாறி விடுவார் அல்லது அதீத கோபக்காரராக மாறிவிடுவார். அதிகம் உணர்ச்சிவசப்படுவார். பார்வை தெளிவாக இருக்காது. பேச்சுக் குளறும். உடலின் Reflex செயல்படாது. தொடு உணர்வு நன்கு மழுங்கிவிடும். எதையேனும் எடுக்க வேண்டும் என்றால் கை அந்தப் பொருளின் பக்கத்தில் போய்த் துழாவிக்கொண்டிருக்கும். காரணம் பார்வை, மூளை, கை இவற்றிற்கிடையேயான ஒத்திசைவு இல்லாமல் போயிருக்கும். வலி தெரியாது.*
*BAC 0.25ல் இருந்து 0.4 சதவீதம் இருக்கையில், மட்டையாகி விடுவார். எந்தவொரு வெளித்தூண்டல்களும் அவரைப் பாதிக்காது. எழுந்து நிற்க முடியாது, நடக்க முடியாது. வாந்தி எடுக்கலாம். நினைவு தப்பிவிடலாம்.*
*BAC 0.35ல் இருந்து 0.50 சதவீதம் இருக்கையில், நினைவு முழுவதும் தப்பிவிடும். Reflex சுத்தமாகப் போய்விடும். கருவிழிகூட வெளிச்சத்தில் சுருங்காது விரியாது. உடல் சில்லிட்டுப் போகும். மூச்சு விடுதல் குறைந்து போகும். இதயத் துடிப்பு குறைந்து விடும். இறந்து போக அதிக வாய்ப்புள்ளது.*
*மதுவை ஒழிப்போம்.*
*Please don't try to suicide இதை உடனடியாக 10 பேருக்கு ப கிர்ந்தால் நீங்கள் கண்ட கனவு நனவாகும். பகிராவி ட்டால்... 

Friday, 28 April 2017

Do you know about out native breed Dogs?

The Kombai is usually tan or red brown with a black mask at muzzle, little bit black hairs on toes and ears and a dark line along the back, white patch on chest are acceptable. Piebald also called porru and brindle also called pullisaral in Tamil language varieties are accepted by fanciers. But dominantly Black mask tan or red brown is found all over Tamil Nadu and called Karuvaisevalai or Karumunjinaai. Apart from this no other colours are found. Height for kombai is around 24″-26″for males although females are two inches shorter, weight is around 35 kilo grams for males and females are nearly five kilo grams lighter. The chief differences between the
Rajapalayam and the Kombai breeds are that the Kombai has more powerful jaws, with a black masked mouth, much more pendent ears, and a tendency to be much more active than the Rajapalayam. It is also slightly shorter than the Rajapalayam, but appears heavier because of its powerful build.Their coats are easily maintainable, and are less prone to skin disorders, fungal and yeast infections, and parasite infestation. The breed, having evolved naturally many centuries ago, is more immune to most diseases compared to the human-designed breeds.
As a guard dog, the Kombai is superior to the Rajapalayam. The Kombai were used for hunting and keeping watch. Nowadays, these are mostly used as guard dogs in farm houses. Years ago they were used to guard people’s cattle from tigers and leopards. A Kombai is as intelligent and sensible dog breed, always ready to please master and other family members. It is an athletic and intelligent breed. Contrary to the popular belief of its savage temper, the Kombai is very alert, a good family dog, loves to play with children and enjoys human companionship. It clearly senses who is welcome and who is not. As an intelligent dog, the Kombai strives to please its master and generally responds to the mood and command of its master from its infancy. It is difficult to find a purebred Kombai now-a-days, as the importance of this dog has diminished.
The Kombai is an ancient breed of dog, used in hunting. The Combai was used for hunting boar, bison and deer. Once available in large numbers throughout Southern India, the Kombai is now restricted to certain parts of Tamil Nadu and to some special kennels.The original old bloodline Kombai has become even very rare. It is often mistaken as a combination of other breeds because of its gigantic appearance when compared with the Kombai which is available with the breeders.[citation needed]
The Kombai’s existence can be traced back to the 15th century and historically, they are known to have been bred to hunt wild boar, deer, and bison. Some breed enthusiasts and natives of South India believe that the breed existed even as far back as the 9th century. Kombais were used by the armies of the Marudhu brothers or Marudhu Pandias, who headed the revolt against the British subjugation of the Kalaiar Koil of the Sivakasi Kingdom at the beginning of the 19th century.
Kombais continue to be popular in South India and are celebrated as not just strong hunters but loyal family pets.

HOME GARDEN TIPS...

*இயற்கை மாடித்தோட்டம்... செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும்...*👌🏽
*மாடித்தோட்டத்தில் செய்ய வேண்டியவை..!*
தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடைக்காலம் முடிந்து ஜூன் , ஜூலை மாதங்களுக்கு மேல் வீட்டுத் தோட்டம் அமைப்பது நல்லது.
மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்க குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி நன்கு படும் இடமாக தேர்வு செய்யவது முக்கியம்.
தோட்டத்திற்கு தேர்வு செய்த இடத்தில் தளத்தை ஈரம் தாக்காமல் இருக்க பாலித்தின் விரிப்பினை தளத்தில் பரப்ப வேண்டும்.
அல்லது ரூபிங்பெயின்ட் அடித்து கொள்ளவும்.
காய்கறித்தோட்டம் போட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் பெரியதாக இடத்தைத் தேடி அலைய வேண்டாம். மனசு வைத்தால் போதும். மொட்டை மாடியில் காய்கறி, மாடிப்படிகளில் கீரை, சன்னல் ஓரங்களில் ரோஜா என்று எல்லாவித செடிகளையும் வளர்க்கலாம்.
தேங்காய்த் துருவினதும் தூக்கி எறியும் கொட்டாங்குச்சியில் கூட கீரை வளர்க்கலாம்.
தொட்டி, பாலிதின் பை, நேரடியாக நிலத்தில்... என எதில் செடி வளர்க்க வேண்டும் என்றாலும், அடிப்படையான சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் செடி வளர்க்க நினைக்கும் பையில், அல்லது நிலத்தில் ஒரு பங்கு செம்மண், ஒரு பங்கு மணல்,அல்லது (தேங்காய் நார்) ஒரு பங்கு இயற்கை உரம்
மண்புழு உரம் என கலந்து வைக்க வேண்டும்.
(தொழு உரத்தையும் அதனுடன் கலக்கலாம்)
இந்த மண் கலவை தயரானதும் உடனே விதை விதைக்கலாம்.
பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும்.
கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.
வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும்.
பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஓரத்திலும் செடியின் மேலும் தெளிக்க வேண்டும்.
பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை இஞ்சி பூண்டு கரைசல் மற்றும் வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
கோடை காலத்தில் இருமுறையும், குளிர் காலத்தில் ஒரு முறையும் ஒரு பைக்கு ஒரு லிட்டர் நீர் ஊற்ற வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் மட்டுமே பாசனம் செய்ய வேண்டும்.
*மாடித்தோட்டத்தில் செய்யக்கூடாதவை..!*
கோடைக்காலத்தில் புதியதாக தோட்டம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.
அப்படி அமைக்க நினைத்தால் நிழல் வளைக்கொண்டு வெயில் அதிகம் படாதமாதிரி ஒரு செட் அமைத்து அதன் உள் தோட்டம் அமைக்கலாம்.
காய்கறி தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியை தேர்வு செய்யக் கூடாது.
பைகளை நேரடியாக தளத்தில் வைக்கக் கூடாது.
பைகளை நெருக்கி வைக்கக் கூடாது.
* ராசாயன உரங்களுடன் உயிர் உரங்களை கலந்து இடக் கூடாது.
ரசாயன பூச்சி மற்றும் பூஞ்சண கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது.
மழை காலங்களில் நீர் ஊற்றக் கூடாது....
தொடரும்....
🙏.......நன்றி.....🙏
*முயற்சி வெற்றி பெறும்......*

Thursday, 20 April 2017

யாரும் பார்த்திடாத நடிகர் விஜயின் அறிய புகைப்படங்கள்

யாரும்பார்த்திடாத  நடிகர்  விஜயின்  அறிய
புகைப்படங்கள்.....



































Wednesday, 19 April 2017

எய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் எச்ஐவி கிருமியை அழிக்கும் மருந்தினை தமிழகத்தை சேர்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர் மாதேஸ்வரன் கண்டுபிடித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எஸ். மாதேஸ்வரன் என்னும் மூலிகை ஆராய்ச்சியாளர் 30 ஆண்டுகளாக மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்ஐவி-ஐ அளிக்கும் மருந்தினை அஸ்கந்தா மற்றும் வல்லாரை மூலிகையில் இருந்து தயாரித்துள்ளார்.
2008 முதல் 2011 ஆண்டு வரை இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இரத்தம் போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவும் இந்த வைரஸினை அழிக்கும் மருந்தினை தயாரித்துள்ளார்.
ஈரோட்டில் உள்ள பெருந்துறை மருத்துவ கல்லூரி, சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகம், மும்பையில் உள்ள ரெலிகேர் நிறுவனம் ஆகியவற்றில் உள்ள ஆய்வுக்கூடங்களில் ஆய்வினை மேற்கொண்டு தயாரித்துள்ள இந்த மூலிகை மருந்தினை எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு கொடுத்து உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மூலிகை மருந்தினை மூன்று மாதங்களுக்கு உட்கொண்டால் நோய் ஆற்றல் அதிகரித்து எச்ஐவி, எச்பிவி கிருமிகள் அழிக்கப்படுகிறது. மிக குறைந்த செலவில் இந்த மருந்தினை தயாரிக்க முடியும் என கூறியுள்ளார்.
மேலும் நீரிழிவு நோயிற்கு திரிபலா மற்றும் நன்னாரியினை கொண்டு மூலிகையினை தயாரித்துள்ளார். தொடர்ந்து 4 மாதங்கள் இதனை உட்கொண்டால் நீரிழிவு நோய் முற்றிலும் குணப்படுத்த இயலும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிற நோய்! மஸ்குலர் டிஸ்ட்ராஃபி’

ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிற நோய்!
சாகிற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும்’ என ‘சிவாஜி’ படத்தில் ஒரு டயலாக் வரும். மரண நாள் தெரியாமல் வாழ்வதில்தான் இருக்கிறது மனித வாழ்க்கையின் சுவாரஸ்யம். ‘

மஸ்குலர் டிஸ்ட்ராஃபி’ எனப்படுகிற தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, இந்த சுவாரஸ்யம் வாய்ப்பதில்லை. மரணத்தை எதிர்நோக்கிய பீதியுடன்தான் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நகரும். நோய் பாதித்தவர்களைவிட அவர்களது பெற்றோரும், உற்றார், உறவினர்களும் அனுபவிக்கிற சிரமங்கள் துயரத்தின் உச்சம்!
பிறக்கும் ஒவ்வொரு 3 ஆயிரம் குழந்தைகளிலும் ஒரு குழந்தையை இந்த தசைச் சிதைவு நோய் தாக்குவதாகச் சொல்கிறது புள்ளி விவரம். ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிற இந்நோய், பெண்களிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை. இந்நோய்க்குக் காரணம் ஒருவித மரபணுக் குறைபாடு என்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நோய்க்கான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப் படாதது வேதனை. இந்நோய்க்கான பிரத்யேக சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும் இல்லை.வாழ்க்கையின் இறுதி நாட்க்களை எண்ணிக்கொண்டிருக்கும் இவர்களின் ஆயுளை சிகிச்சைகள்,மூலம் கூட்டலாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூரில் ‘மயோபதி’ என்கிற பெயரில் இந்நோய்க்கான சிறப்பு மருத்துவமனை இயங்குகிறது. நடிகரும், முன்னாள் எம்.பியுமான நெப்போலியனின் ஜீவன் ஃபவுண்டேஷன் அமைப்பின் ஒரு அங்கம் இது. ‘‘எங்க மூத்த மகன் தனுஷ், இதே நோயால பாதிக்கப்பட்டவன். ரெண்டாவது மகன் பிறந்து, அவன் சாதாரணமா நடக்க ஆரம்பிச்ச போதுதான், மூத்தவனோட நடையும், உடல் இயக்கமும் சரியா இல்லையேங்கிற சந்தேகம் எங்களுக்கு வந்தது. உடனடியா மருத்துவரைப் பார்த்தப்ப, அவனுக்கு ‘மஸ்குலர் டிஸ்ட்ராஃபி’ங்கிறதை உறுதி செய்தார். அன்னிக்கு ஆரம்பிச்ச சிகிச்சைகள், 11 வருஷங்களைக் கடந்தும் தொடர்ந்திட்டிருக்கு.
அவனுக்கு நாங்க அமெரிக்காவுல சிகிச்சை கொடுக்கறோம். அங்கே கொடுக்கிற சில சிகிச்சைகளின் விளைவா, நடக்கவே முடியாம, சக்கர நாற்காலியிலேயே இயங்கிக்கிட்டிருந்த எங்க மகன், இப்ப மெல்ல மெல்ல நடக்க ஆரம்பிச்சிருக்கான். பொதுவா இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கு வாழ்நாள் ரொம்பக் கம்மி. ஆனா, இந்த சிகிச்சைகளோட விளைவா, வாழ்நாளை அதிகரிக்க முடியும்னு நிரூபிச்சிட்டிருக்காங்க. எங்களோட மகன் மட்டும் பலனடைஞ்சா போதுமா... எத்தனை எத்தனை குழந்தைங்க சரியான சிகிச்சைகளும், வழி காட்டுதலும் இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காங்கன்னு யோசிச்சப்பதான், ‘மயோபதி’ மருத்துவமனையைத் தொடங்கற எண்ணம் வந்தது.
பாதிக்கப்பட்ட யார் வேணாலும் இங்கே வரலாம். பிசியோதெரபி, ஹைட்ரோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி-ன்னு நிறைய பயிற்சிகள் கொடுத்து, குழந்தைங்களை நடக்க வைக்கிறாங்க. தங்கற செலவையும், சாப்பாட்டு செலவையும் மட்டும் சம்பந்தப்பட்டவங்களே பார்த்துக்கணும். மத்தபடி முழு சிகிச்சையும் எல்லாருக்கும் இலவசம். ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு டாக்டர்கள் கையை விரிச்ச பிறகு, குழந்தைங்களை இங்கே கூட்டிட்டு வந்து, அவங்க நடக்கறதையும், சுறுசுறுப்பா இயங்கறதையும் பார்த்து, ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாங்க பெற்றோர்.
அவங்களோட அந்த ஆசியும் வாழ்த்தும் எங்க மகனை வாழ வச்சிடும்...” நெகிழ்ந்து பேசுகிறார்கள் நெப்போலியனும், அவரது மனைவி ஜெயசுதாவும்.
‘‘3 வயசு வரைக்கும் இந்த நோய் எந்த அறிகுறிகளையும் காட்டறதில்லை. குழந்தைங்க சாதாரணமா இருப்பாங்க. 3 வயசுக்குப் பிறகு திடீர்னு நடை தடுமாறும். கால்கள் பலமிழக்கும். அடிக்கடி கீழே விழுவாங்க. எழுந்திருக்க சிரமப்படுவாங்க. கொஞ்ச நாள்ல தன்னிச்சையா இயங்கற சக்தி போயிடும். பெரும்பாலான பெற்றோர், இதை ஏதோ பலவீனக் கோளாறு, பில்லி, சூன்யம்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு அலட்சியப்படுத்தறாங்க.
அவங்களுக்கு உண்மை தெரியறதுக்குள்ள பாதிப்பு தீவிரமாயிடுது. அப்படியில்லாம, சந்தேகமா இருந்தா, உடனடியா மருத்துவரைப் பார்த்து ரத்தப் பரிசோதனை செய்யணும். சிபிகே டெஸ்ட்டுன்னு சொல்ற அதுல திசுக்களோட பாதிப்பும் தீவிரமும் தெரியும். அடுத்து, தசையை பயாப்சி செய்து பார்த்து, இந்த நோய் இருக்கிறதை உறுதிப்படுத்திக்கலாம். எத்தனை சீக்கிரம் சிகிச்சைகளை ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு நல்லது. அசைக்கவே முடியாம இருந்த தசைகளை அசைக்க வைக்கிறது மட்டுமில்லாம, வாழ்நாளையும் அதிகப்படுத்த முடியுங்கிறது நிரூபிக்கப்பட்டிருக்கு.
 இந்த நோய் பாதிச்ச ஒரு குழந்தையின் குடும்பத்தில் அடுத்த குழந்தையும் இதே நோயால பாதிக்கப்பட 50 சதவிகித அபாயம் இருக்குங்கிறது பல பெற்றோருக்குத் தெரியாத தகவல். ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிற நோய் இது. ஒரு ஆண்மகனின் சகோதரிக்கு பாதிப்பு இல்லைன்னாலும் அந்தச் சகோதரி வளர்ந்து கல்யாணமாகி, அவங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு இந்த நோய் பாதிப்பின் அபாயம் 50 சதவிகிதமா இருக்குங்கிறதையும் பெற்றோர் புரிஞ்சுக்கணும்.
தாய் கர்ப்பமா இருக்கும்போதே, குழந்தைக்கு இந்த நோய் தாக்குமாங்கிறதைக் கண்டுபிடிக்கிற மரபணு ஆலோசனையும் நம்மூர்ல பிரபலமாயிட்டிருக்கு. அடுத்த சந்ததியை இந்த நோய்லேருந்து காப்பாத்திட முடியுங்கிற நம்பிக்கையும் அதிகமாயிருக்கு...’’ என்கிறார்கள் மயோபதி மருத்துவமனையைச் சேர்ந்த திட்ட இயக்குநர்கள் அஜய் மற்றும் வசந்தி பாபு.

Tuesday, 18 April 2017

6 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தில் நடிக்கும் வடிவேலு



சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்தில் நடிக்கிறாராம் வடிவேலு. திரையுலகில் இருந்து தள்ளி இருந்த வைகைப் புயல் வடிவேலு விஷாலின் கத்திச் சண்டை மூலம் திரும்பி வந்தார். வடிவேலுக்காக படத்தை பெரிதும் எதிர்பார்த்து சென்றவர்கள் அவரின் திறமையை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என்றனர்.

இந்நிலையில் வடிவேலு ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்யை வைத்து அட்லீ இயக்கி வரும் விஜய் 61 படத்தில் நடிக்கிறாராம் வடிவேலு. படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். இது குறித்து படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், தெறி படத்திலேயே வடிவேலு நடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த பட வாய்ப்பை அவரால் ஏற்க முடியவில்லை. விஜய் 61 படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெரும்பாலான காட்சிகளில் அவர் விஜய்யுடன் வருவார் என்றார். 6 ஆண்டுகள் கழித்து வடிவேலு விஜய் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யை வைத்து படம் இயக்க 2004-லேயே ராஜமௌலியிடம் கேட்டேன்! - கலைப்புலி தாணு

விஜய்யை வைத்து படம் இயக்க 2004-லேயே ராஜமௌலியிடம் கேட்டேன்! - கலைப்புலி தாணு

சென்னை: விஜய்யை வைத்து என் பேனரில் ஒரு படம் இயக்கித் தருமாறு 2004-லேயே நான் ராஜமௌலியிடம் கேட்டிருக்கிறேன், என்று புதிய தகவலை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. பாகுபலி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு பேசுகையில், "இந்தியத் திரையுலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இது.

எத்தனையோ இயக்குநர்கள் என்னுடன் பணியாற்றியபோதும் எனக்கு ராஜமெளலியுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை. 2004-ம் ஆண்டிலேயே (சச்சின் வெளியான நேரம்) நான் ராஜமெளலியுடன் பேசி 'விஜய்யை வைத்து ஒரு படத்தை நீங்கள் இயக்க வேண்டும்' என்றேன். 'இப்போது இரண்டு படங்களில் பணியாற்ற இருக்கிறேன். அப்புறம் பார்ப்போம்..' என்று அவர் சொல்ல.. அது அப்படியே தள்ளித் தள்ளிப் போய் இன்றைக்கும் அப்படியே இருக்கிறது. எங்களது சத்யராஜ், புரட்சித் தலைவரின் வாரிசு. இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவர் வாள் எடுத்து வீசும் காட்சியை பார்த்தபோது அப்படியொரு சந்தோஷமாக இருந்தது. அவரும் ஆந்திராவில் மிகப் பெரிய புகழைப் பெற்றுவிட்டார் என்பதை நினைக்கையில் எனக்கும் பெருமையாக இருக்கிறது.. இந்தப் படம் உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருப்பதால் 'பாகுபலி-1' பெற்ற வெற்றியைவிடவும் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்," என்றார்.

விஜய் - முருகதாஸ் படத்துக்கு மூன்று ஹீரோயின்கள்?

விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் என்று மூன்று ஜோடிகள். விஜய் அடுத்து நடிக்கவிருப்பது ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில்.

ஏஆர்.முருகதாஸ் - விஜய் இணைகிறார்கள் என்பது மட்டும் தான் உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரகுல்ப்ரீத் சிங் நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. ரகு ப்ரீத் சிங் இப்போது ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது. ரகுல்ப்ரீத் சிங்குக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. எனவே ரகுலை கமிட் பண்ண தமிழ் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். ரகுல் தவிர சமீபகாலமாக பாலிவுட்டில் கலக்கி வரும் டாப்ஸி, எமி ஜாக்ஸன் ஆகியோர் பெயர்களும் விஜய படத்துக்கு அடிபடுகின்றன.